
Sunday, August 31, 2008
புகைப்பதை நிறுத்து

Thursday, August 28, 2008
பொறாமை!!
எதிரேயிருந்த வெள்ளைச் சுவரின் மீது வெயில் விழுந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் கண் கூசுகிற வெளிச்சத்தில், அங்கே இருந்தவர்களின் முகங்கள் தெளிவற்றும் மங்கலாகவும் தெரிந்தன. தாயின் அனுமதியோ, வழிகாட்டலோ இல்லாமல், ஒரு சிறு பெண் குழந்தை என் அருகே வந்து அமர்ந்து கொண்டார். பின், அக்குழந்தை விரிந்த கண்களுடன், 'இங்கே என்ன நடக்கிறது ' என்கிற வினா கலந்த ஆச்சரியத்துடனும் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர், புதிதாய் நீராடி, நல்லுடையுடுத்தி, சிகையில் மலர்கள் சூடி, மிகவும் அழகாய் இருந்தார். எல்லாக் குழந்தைகளையும் போலவே, சுற்றி நடப்பதையெல்லாம் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டும், ஆனால் எதையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளாமலும் இருந்தார். ஒளி படைத்த அவர் கண்கள் - அழுவதா, சிரிப்பதா, மகிழ்வுடனும் விளையாட்டுணர்வுடனும் குதிப்பதா என்று - என்ன செய்வது என்பதறியாமல் யோசித்தன. மாறாக, அவர் என் கையை எடுத்து, உள்ளங்கையையும் விரல்களையும் சுவாரஸ்யமான ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில், தன்னைச் சுற்றி இருந்தவர்களையும், தன்னையும் மறந்தவராய், ஓய்வாக என் மடியில் தலைவைத்துத் தூங்க ஆரம்பித்தார். அவர் சிரம் அழகான வடிவுடனும், நேர்த்தியாகவும் இருந்தது. குறையேதும் இல்லாத தூய்மையும், அழகும் கொண்டவராய் இருந்தார் அப்பெண் குழந்தை. ஆனால், அந்த அறையிலிருந்த மற்றவர்களைப் போலவே, அக்குழந்தையின் எதிர்காலமும், குழப்பமானதாகவும், துன்பமயமானதாகவும் இருக்கும். அக்குழந்தைக்கு நேரப்போகும் முரண்பாடுகளும், துயர்களும் - எதிரே இருந்த சுவரின் மீது விழுந்து கொண்டிருந்த வெயில் போல - தவிர்க்க இயலாதவை. ஏனெனில், அவர் பெறப்போகும் கல்வியும், அவரை ஆட்கொள்ளப் போகும் தாக்கங்களும் - வேதனையிலிருந்தும், வலியிலிருந்தும், துயர்களிலிருந்தும் விடுதலைப் பெறத் தேவையான நுண்ணறிவு அவருக்குக் கிடைக்காவண்ணம் தடுத்துவிடும். புகையில்லாத தீயின் சுடர் போன்ற அன்பு, இவ்வுலகில் மிகவும் அரிதானது. அன்பு என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிற புகையே - நாம் மூச்சடைத்துத் திணறும்படி, சர்வசக்தியுடன் - எங்கும் கவலையையும், கண்ணீரையும் கொண்டுவருகிறது. அந்தப் புகையினூடே தீச்சுடர் தெரிவதில்லை.
புகையானது எங்கும் விரவி வியாபிக்கும்போது, தீயின் சுடர் அணைந்து போகிறது. அன்பு என்கிற தீச்சுடர் இன்றி வாழ்க்கை மழுங்கியும் சோர்ந்தும் போகிறது. அன்பெனும் சுடரின்றி, வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. ஆனால், இருள் சூழ்ந்த புகையினூடே, தீயின் சுடர் இருக்கவோ, நிலைக்கவோ இயலாது. புகையும் சுடரும் இணைந்தும் பிணைந்தும் வாழ இயலாது. தெளிந்த தீச்சுடர் ஒளியுமிழ, புகை நிறுத்தபப்ட வேண்டும். இப்படிச் சொல்கிற காரணத்தால், தீச்சுடரானது புகைக்கு எதிரி இல்லை. தீச்சுடருக்கு எதிரிகள் இல்லை. புகையானது தீச்சுடர் அல்ல; அங்ஙனமே, புகையானது சுடரின் இருப்பைச் சொல்கிற அடையாளமும் அல்ல. ஏனெனில், புகையிலிருந்து முற்றிலும் விடுபட்டதே சுடராகும்.
'அன்பும் வெறுப்பும் இணைந்திருக்க இயலாதா ? பொறாமையானது அன்பினைச் சொல்லுகிற அடையாளம் தானே! நாம் கைகோத்து மகிழ்கிறோம்; அடுத்த நிமிடமே வசவுகள் பகிர்கிறோம்; கடுமொழிகளால் பரஸ்பரம் சுட்டுக் கொள்கிறோம்; ஆனால், விரைவிலேயே எல்லாம் மறந்து, ஆரத் தழுவி ஆலிங்கனம் செய்து கொள்கிறோம். நாம் சண்டையிடுகிறோம்; பின்னர் முத்தமிட்டு சமரசமும் சமாதானமும் ஆகிவிடுகிறோம். இவையெல்லாம் அன்பும், அன்பின் சமிக்ஞைகளூம் இல்லையா! பொறாமை என்பதே அன்பினை வெளிப்படுத்தப் பிறக்கிற ஒரு மொழிதானே! இருளும் ஒளியும் போல, பொறாமையும் அன்பும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்ததுதானே! துரிதமான கோபமும், இச்சை மொழிகள் நிறைந்த கொஞ்சலும் அன்பின் முழுமை இல்லையா ? வெள்ளம் பெருக்கெடுத்து, முரட்டுத்தனமாய்ப் பாய்கின்ற ஆறுதான், சலனமின்றி நடக்கின்ற நதியாகவும் இருக்கிறது. இரவில், நிழலில், ஒளியில் என்று எந்தச் சூழலில் பாய்ந்தாலும், நடந்தாலும் அது நதிதானே! இவையெல்லாம் தானே நதியின் இயல்பும் அழகும் ஆகும்! '
அன்பு என்றும் நேசம் என்றும் நாம் அழைக்கிறோமே, அதுதான் என்ன ? இந்தப் பொறாமையும், காமமும், கடுமொழிகளும், கொஞ்சலும், கைகோத்துக் கொள்ளுவதும், பிணங்கிச் சண்டையிடுவதும், பின்னர் இணங்கிச் சமரசம் ஆகுவதும் நிறைந்த தளமும் புலமும் தானா அன்பு ? அன்பு என்கிற பெயரால், நாம் செய்கிற நிஜங்களும், செய்கைகளும் இவை. கோபமும், கொஞ்சலும் - அன்பு என்கிற புலத்தில் - நிதந்தோறும் நாம் காணுகிற நிதர்சனங்கள். கோபமும் கொஞ்சலும் சார்ந்த பல்வேறு வகைப்பட்ட செய்கைகளுக்கிடையே ஓர் உறவையும் தொடர்பையும் உருவாக்க நாம் விரும்புகிறோம். அல்லது, இத்தகைய செய்கைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பொருள் காண முயல்கிறோம். ஒரு தளத்தில் நிகழ்கிற ஒரு செய்கையை வைத்து, அதே தளத்தில் நிகழ்கிற மற்றொரு செய்கையை கண்டிக்கவோ, நியாயப்படுத்தவோ முயல்கிறோம். அல்லது, ஒரு தளத்தில் நாம் காணுகிற நிதர்சனத்தோடு, அதே தளத்திலோ, அத்தளத்திற்கு அப்பாற்பட்டோ இருக்கிற மற்றொரு நிதர்சனத்தைத் தொடர்புறுத்தி இரண்டுக்குமிடையே ஒரு பொது உறவினை உண்டாக்க முயற்சிக்கிறோம். ஒவ்வொரு செய்கையையும், ஒவ்வொரு நிஜத்தையும் தனித்தனியே எடுத்து ஆராயாமல், அவற்றுக்கிடையே ஒரு பரஸ்பர உறவினையே நாம் உருவாக்க விரும்புகிறோம். நாம் ஏன் அப்படிச் செய்கிறோம் ? அதே தளத்திலோ, அத்தளத்திற்கு அப்பாற்பட்டோ உள்ள மற்றொரு செய்கையை ஊடகமாகப் பயன்படுத்தாத போதே, ஒரு செய்கையை, அந்தச் செய்கையின் நிஜப் பொருளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதே புலத்திலோ, அதற்கு அப்பாற்பட்டோ உள்ள மற்றொரு செய்கையை, புரிந்து கொள்வதற்கான ஊடகமாகப் பயன்படுத்தும்போது, அது முரண்பாடுகளையும், குழப்பத்தையுமே உருவாக்குகிறது. ஆனாலும், நாம் ஏன் ஒரு தளத்தின் பெயரால், பல்வேறு செய்கைகளையும் அவற்றின் நிஜத்தையும் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் ? ஒரு செய்கையின் முக்கியத்துவத்தை வைத்து, மற்றொரு செய்கையை விளக்கவோ, ஈடு செய்யவோ ஏன் முயல்கிறோம் ?
'நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைக் கிரகித்துக் கொள்ளத் தொடங்குகிறேன். ஆனால், நாம் ஏன் அப்படிச் செய்கிறோம் ? '
நாம் ஒரு செய்கையை, அதன் உண்மையை, எண்ணம் என்கிற திரைமூலமாகவோ, நினைவு என்கிற வடிகட்டி மூலமாகவோ புரிந்து கொள்கிறோமா ? உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்த காரணத்தால், நான் பொறாமையைப் புரிந்து கொள்கிறேனா ? பொறாமை நிஜமானது என்பது போல, உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்ததும் நிஜம். ஆனால், பொறாமையையும், அதன் இயக்கத்தையும் உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்ததை நினைவில் வைத்திருக்கிற காரணத்தால் நான் புரிந்து கொள்கிறேனா ? நினைவானது புரிந்து கொள்வதற்கான உபகரணமா ? நினைவு ஒப்பிடுகிறது; நினைவு மாறுகிறது; நினைவு மாற்றுகிறது; நினைவு கண்டிக்கிறது; நினைவு நியாயப்படுத்துகிறது; நினைவு அடையாளம் காணுகிறது; ஆனால், நினைவு எதையும் புரிந்துகொள்வதற்கு உதவ முடியாது. அன்பு என்கிற தளத்தில் நம்முடைய செய்கைகளையும், அவற்றின் நிஜத்தையும் முன்னறுதியிட்ட எண்ணங்களுடனும், முடிவுகளுடனுமே நாம் அணுகுகிறோம். பொறாமையை, எந்த முன்முடிவும் இன்றி, அதன் இயல்பில் எடுத்துக் கொண்டு நாம் அமைதியாகக் கூர்ந்து கவனிப்பதில்லை. ஆனால், பொறாமையை, பொறாமை சார்ந்த செய்கையை, நம்முடைய வசதிக்கும், முடிவுக்கும் ஏற்ப திரித்துப் பொருள் காண விரும்புகிறோம். பொறாமையை, அதன் இயக்கத்தை, நிஜத்தை நாம் புரிந்து கொள்ள விரும்பாததே, நம்மின் இந்த அணுகுமுறைக்குக் காரணம் ஆகும். ஏனெனில், பொறாமை உண்டாக்குகிற கிளர்ச்சியும், எழுச்சியும் கூட கொஞ்சலால் பிறக்கின்ற கிளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சமம்; ஆனால், பொறாமையினால் பிறக்கின்ற கிளர்ச்சியானது, பொறாமை கொண்டுவருகிற வலியும், அசெளகரியமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். அதனால், அன்பு என்கிற தளத்திலே, முரண்பாடுகளூம், குழப்பமும், பகையும் பிறக்கிறது. எனவே, அன்பானது என்ன ?அன்பானது ஓர் எண்ணமா, பாவனையா, கிளர்ச்சியா, தூண்டுதலா அல்லது பொறாமையா ?
'உண்மையானது மாயையையும் சேர்த்தது தானே! இருளானது தன்னுள்ளே ஒளியை உள்ளடக்கியதுதானே! நம்முடைய கடவுளர்கள் கூட இத்தகைய செய்கைகளால்தானே தளைக்கப்பட்டுள்ளனர் ? '
இவையெல்லாம், செல்லத்தகாத, வெறும் எண்ணங்களும், அபிப்ராயங்களூம், தீர்மானங்களுமே ஆகும். இத்தகைய எண்ணங்கள், உண்மைநிலையை உள்ளடக்குவதோ, வெளிப்படுத்துவதோ இல்லையாதலால், பகையையே வளர்க்கின்றன. வெளிச்சம் இருக்கிற இடத்திலே இருள் இல்லை. இருளானது ஒளியை ஒளித்து வைக்க இயலாது. இருளானது ஒளியை உள்ளடக்கியது என்று சொன்னால், அங்கே வெளிச்சமே இல்லை என்று பொருள். பொறாமை இருக்கிற இடத்திலே அன்பு இல்லை. முனஅறுதியிட்ட என்ணங்களும், அபிப்ராயங்களூம், அதனால் பிறக்கிற செய்கைகளும், அன்பினை உள்ளடக்கவோ, வெளிப்படுத்தவோ முடியாது. பகிர்ந்து கொள்வதற்கு உறவு மிக அவசியமாகிறது. அன்பானது எந்த எண்ணத்தையும், அபிப்ராயத்தையும் சார்ந்தது அல்ல; எனவே, முன்னறுதியிட்ட எண்ணங்களோ, அபிப்ராயங்களோ அன்பைப் பரிமாறிக்கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ உதவாது. புகையற்ற, தெளிந்த தீச்சுடரே அன்பாகும்.
(மூலம்: வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் - தொகுப்பு: 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on Living - Volume: I - J. Krishnamurthi])
Thursday, August 21, 2008
வாழ்க்கை.....
2. தினமும் ஒரு பத்து நிமிடம் அமைதியாய் அமருங்கள். தேவையென்றால் அதற்காக ஒரு பூட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
3. தினம் முறைப்படி இறைவனைத் தொழுங்கள். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள்.
4. சிறிது நேரம் ஒதுக்கி 70 வயதுக்கு மேற்பட்டோர்களிடமும் 6 வயதுக்கு குறைந்தவர்களிடமும் தினமும் பழகுங்கள்.
5. மரத்திலும் செடிகளிலும் வளருவதை அதிகம் உணவில் சேருங்கள். ஆனால் அவற்றிலிருந்து தயாரிக்கப் படுபவற்றை குறைத்து உண்ணுங்கள்.
6. அதிகமாய் நீரருந்துங்கள். Green டீ குடியுங்கள்.
7. ஒரு நாளில் குறைந்தது மூன்று பேரை சிரிக்க வையுங்கள்.
8. உங்கள் வீடும், காரும், மேசையும் அழுக்குகளை விட்டும் தினமும் தூய்மையாகட்டும். உங்கள் வாழ்வில் புதுமையும் சக்தியும் நிரம்பட்டும்.
9. கிசுகிசு, பழையன பேசுதல், எதிர்மறை சிந்தனை, உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்கள் போன்றவற்றை பேசுவதற்காக உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். மாறாக உங்கள் சக்தியை நிகழ்கால நேரான விடயங்களில் செலவிடுங்கள்.
10. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம் என்பதை உணருங்கள். நாம் இங்கே கற்றுக் கொள்ள வந்தோம். பிரச்னைகளும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதிதான். அல்ஜீப்ரா வகுப்பு போல பிரச்னைகள் வரும் போகும் ஆனால் நாம் படித்தவைகள் நம் வாழ்வு முழுதும் தங்கும்.
11. உங்கள் காலை உணவில் ஒரு அரசனாகவும், மதிய உணவில் ஒரு வழிப் போக்கனாகவும், இரவு உணவில் ஒரு பிச்சைக்காரனாகவும் உண்ணுங்கள்.
12. வாழ்க்கை சில வேளைகளில் நியாயாமற்றதாக தோன்றலாம் ஆனால் அப்போதும் வாழ்க்கை அழகானது.
13. வாழ்க்கை மிகச் சிறியது அதில் மற்றவர்களை வெறுக்க ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்.
14. உங்களை நீங்களே மிக முக்கியமானவராக கருதிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களும் நம்மை அவ்வாறு கருத மாட்டார்கள்.
15. ஒவ்வொரு விவாதத்திலும் நீங்களே வெல்ல வேண்டுமென நினைக்காதீர்கள். உங்கள் வாதம் ஏற்கப்படாமலிருக்கலாம் என்பதை ஏற்கப் பழகுங்கள்.
16. உங்களின் இறந்த காலத்தை அமைதிப் படுத்துங்கள் அப்போதுதான் அது உங்கள் நிகழ்காலத்தை கெடுக்காது.
17. உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களுடைய வாழ்க்கைப் பயணம் எவ்வாறானது என்பதை நீங்கள் உணர முடியாது.
18. பெண்களே!. அந்த நறுமணத்தை இப்போதே புகைய விடுங்கள். அந்த நல்ல விலையுயர்ந்த துகிலை இன்றே உடுத்துங்கள். சிறந்த நாட்களின் வருகையை எதிர்நோக்கி தாமதிக்காதீர்கள். ஒவ்வொரு நாளும் சிறந்த நாள்தான்.
19. உங்களது மகிழ்ச்சிக்கு உங்களைத் தவிர வேறு யாரும் பொறுப்பல்ல.
20. உங்களது ஒவ்வொரு பெருந்துன்பத்தையும் இதைச் சொல்லி கட்டம் கட்டுங்கள். 'இன்னும் ஐந்து வருடத்துக்குப்பின் இது நமக்கு துன்பமாகத் தோன்றுமா?'
21. எல்லோரையும் எல்லாவற்றுக்காகவும் மன்னித்து விடுங்கள்.22. உங்களைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் கவலையடையத் தேவையில்லை.
23. காலம் எல்லாவற்றையும் ஆற்றுப் படுத்தும். எனவே காலத்துக்கும் சிறிது கால அவகாசம் தாருங்கள்.
24. நிலைமை எவ்வளவுதான் நல்லதாகவோ கெட்டதாகவோ இருந்தாலும் அதுவும் மாறக்கூடியதே.
25. நீங்கள் நோய்வாய்ப்பட்டால் உங்கள் வேலை வந்து உங்களை கவனித்துக் கொள்ளாது. உங்கள் நண்பர்கள் வந்து கவனிப்பார்கள். அவர்களோடு தொடர்பில் இருங்கள்.
26. பயனற்றதாகவும், அழகற்றதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் உள்ளவற்றிலிருந்து ஒதுங்குங்கள்.
27. பொறாமை கொள்வது நேரத்தை வீணடிப்பதாகும். நமக்கு அனைத்தையும் கடவுள் அளித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
28. உங்கள் வாழ்வின் சிறந்தவை இனிதான் நிகழவிருக்கிறது.
29. நீங்கள் எப்படி இருந்தாலும் எழுங்கள். நன்றாக உடுத்துங்கள். சிறப்பாகத் தோன்றுங்கள்.
30. நல்லவற்றை மட்டுமே செய்யுங்கள்.
31. அடிக்கடி உங்கள் குடும்பத்தினரிடம் பேசுங்கள்.
32. ஒவ்வொரு நாளும் உறங்கும் முன் கீழுள்ள வாசகத்தை பூர்த்தி செய்யுங்கள்இன்று நான் ____________ நன்றி செலுத்துகிறேன்.இன்று நான் _______________ நன்றாய் முடித்தேன்.
33. நீங்கள் மன அழுத்தம் கொள்வதை விட்டும் சிறப்பானவராக வடிவமைக்கப் பட்டிருக்கின்றீர்கள்.
34. பயணத்தை சுவையுங்கள். எல்லாமே வேகமாக பறப்பதற்கு இது ஒன்றும் டிஸ்னி வேர்ல்ட் இல்லை. கடந்து செல்லுங்கள். வாழ்க்கை என்பது ஒரே பயணம்தான் அதை முழுவதும் சுவையுங்கள். அதை அழகாக அனுபவியுங்கள். வாழுங்கள். அன்பு செலுத்துங்கள். வாழ்க்கை என்பதே ஒரு வெகுமதி.போனதையும் வருவதையும் எண்ணி நிகழ்காலத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.அதனால்தான் நிகழ்காலமே PRESENT என ஆங்கிலப் படுத்தப் படுகிறது.வாழ்வை நேசித்து அனுபவியுங்கள்.
போராட்டங்கள் வாழ்வுக்கு மிகவும் அவசியமானது!
திடீரென்று சலனங்கள் மறைந்து போனது. அது தன்னால் இயன்றவரை போராடியும், அதனால் முடியாமல் போய், நிறுத்தி விட்டதாக அவனுக்குத் தோன்றியது.
அவன் அந்த பூச்சிக்கு உதவ நினைத்து, ஒரு கத்தரியை எடுத்து அதன் துவாரத்தை சற்று பெரிதாக்கினான். இப்போது இந்த வண்ணத்துப் பூச்சி சுலபமாக வெளியில் வந்தது. ஆனால் அதன் உடம்பு சிறுத்து, உலர்நது போய், இறக்கைகள் வளர்ச்சியற்று வீணாகி இருந்தது.
இன்னும் சிறிது நேரத்தில் அதன் இறக்கைகள் வளர்ந்து விரிந்து அந்த வண்ணத்துப்பூச்சியின் உடலைத் தாங்கும் வண்ணம் செம்மையாவதைப் பார்ப்பதற்காக அந்த மனிதன் அதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
எதுவும் நடக்கவில்லை. உண்மையில் அந்த வண்ணத்துப்பூச்சி தன் எஞ்சிய வாழ்நாளை பறக்க முடியா இறக்கைகளுடன், உலர்நத உடம்புடன், ஊர்ந்தே வாழ நேரிட்டது.
அந்த பூச்சி, அந்த கடினமான சிறிய துவாரத்திலிருந்து, முறைப்படி, சிறிது சிறிதாக போராடி வருவதே, இயற்கையான வழியில், அதன் உடம்பிலும், இறக்கையிலும் தேவையான பலத்தை பெற்றுத் தந்து, அது கூட்டிலிருந்து சுதந்திரமாய் வெளியேறி பறக்க உதவும் என்பதை அம்மனிதன் தன் இரக்க குணத்தினாலும் நேசத்தினாலும் அறிந்திருக்கவில்லை.
சில நேரங்களில் போராட்டங்கள் வாழ்வுக்கு மிகவும் அவசியமானது. எந்தத் தடைகளுமில்லாமல் வாழ்நாளை நாம் பழகியிருந்தால், அதுவே பின்னாளில் நம்மை முடக்கி விடும். தடை தாண்டத் தெரியாமல் தடுமாற்ற மேற்பட்டு, வாழ்வில் பறக்க வியலாது.
நான் பலத்தை வேண்டினேன். நான் பலம் பெற உதவியாக, சிரமங்கள் தரப்பட்டது.
நான் அறிவை வேண்டினேன். எனக்குச் சோதனைகள் தரப்பட்டு, தீர்க்க அறிவுறுத்தப்பட்டது.
நான் செழிப்பை வேண்டினேன். எனக்கு மூளையும், உடல் வலிவும் தரப்பட்டு, உழைக்க ஏவப்பட்டது.
நான் துணிவை வேண்டினேன்.எனக்குத் தடைகள் தரப்பட்டு, தாண்டச் சொன்னது.
நான் அன்பை வேண்டினேன்.வாழ்வில் துன்பப்படும் மனிதர்களைக் காட்டி, அவர்களுக்கு உதவச் சொன்னது.
நான் உதவி வேண்டினேன். எனக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது.
நான் கேட்ட எதுவுமே எனக்கு கொடுக்கப்படவில்லை - ஆனால்எனக்குத் தேவையான அனைத்தையும் நான் பெற்றுக் கொண்டேன்.
வாழ்க்கையை பயமின்றி வாழுங்கள். எல்லா தடைகளையும் துணிவோடு எதிர் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் அதைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
Monday, August 18, 2008
சரித்திரத்தில் நிலைபெற்ற இஸ்ரேல்!
செ. மாதவன்
நன்றி : தினமணி
Friday, August 15, 2008
உத்தப்புரம் ...உரிமைக்காக.....
வேங்கையே ! வாடா வெளியில் வா ஓங்கிவீசு நீ புயலாக வீசு ! தீங்கு செய் கொடியர் தமிங்கிலார் தீட்டும்திட்டங்கள் துகள்படச் செய்யவாய் !
- காசி ஆனந்தன்
தமிழகத்தில் மாற்று அணி ; காலத்தின் கட்டாயம்
நினைவஞ்சலி....

தேவேந்திரரின் நிகரற்ற சொத்தே! வாழ்திடும்போதே வரலாறு தந்தவன் மானத்தோடுஎம்மை தலை நிமிரச் செய்தவன்!
எங்கள் கண்ணீர் பூக்களைஉங்கள் காலடியில்
Wednesday, August 13, 2008
நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
எனவே மது ஒழிப்பு என்பது ஒரு மாயை, எத்தனையோ பேர் முயன்று முடியாததை இன்று ஒழித்துவிட முடியுமா என்ற கேள்விகளைக் கேட்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார் தமிழக முதல்வர்.இந்த நிலையில் எரிசாராயம் அருந்தி சமீபத்தில் பலர் இறந்ததை பத்திரிகை மூலம் நாம் அனைவரும் அறிவோம். அந்தப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களைச் சந்திக்க இடதுசாரி இயக்கத் தலைவர்கள் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறும்போது, ஒட்டுமொத்தமாக அந்தக் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாகப் பெண்கள், இந்தத் தலைவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர். மது விற்பனையை அரசின் மூலம் தடைசெய்யத் தாங்கள் உதவ வேண்டும். இல்லையென்றால் எங்கள் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்பதுதான் அது.இந்த நிலையில் இன்னொரு விவாதம் வைக்கப்பட்டது. அதாவது எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் மக்கள் குடிப்பது தவறு, குடி எங்கள் குடியைக் கெடுக்கும், எங்கள் குடும்பங்களைக் கெடுக்கும், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கெடுக்கும் என்று தீர்மானித்து மது எங்கள் பகுதிகளில் வேண்டாம் என முடிவு எடுக்கிறார்களோ அந்தப் பகுதிகளில் மது ஒழிக்கப்படல் வேண்டும்.இதற்கு மகாராஷ்டிர மாநிலம் உள்ளாட்சிக்கு அதிகாரம் வழங்கிவிட்டது. எனவே இதேபோல் இங்கும் மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற வாய்ப்பளியுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். அது மட்டுமல்ல, கள்ளச் சாராயம் காய்ச்சுவதைத் தடுத்த காரணத்திற்காக பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் கொலையுண்டதையும், ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம்.மேற்கூறிய விவாதத்தின் அடிப்படை என்னவென்றால், மதுவை ஒழிப்பதற்குப் பதிலாக, மது மக்கள் மேல் திணிக்கப்படுகிறது என்பதுதான். ஆண்டுதோறும் வணிகம் நடத்துகிறவர்கள் தங்கள் வணிகத்துக்கு இலக்கு நிர்ணயித்து, அதை எவ்வாறு எட்ட முனைவார்களோ அதேபோல், தமிழக அரசும் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்துச் செயல்பட ஆரம்பிப்பது மக்களின் மேல் மதுவைத் திணிப்பதற்குச் சமமாகும். எனவே இந்த மதுத் திணிப்பை மக்கள் புறக்கணிக்கும்போது அதைத் திணிக்க முயலக் கூடாது. அரசு மக்களை மறைமுகமாக குடிக்க வற்புறுத்தக்கூடாது என்ற நிபந்தனையை அடிப்படையாக வைத்தனர்.இதற்குப் பதிலளிக்கும்போது அரசுத் தரப்பில் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அதாவது, அரசு மதுபானக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் அந்த இடத்துக்கு வந்துவிடும். அதை ஒழிப்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம் என்ற வாதத்தை வைக்கிறது.இதனால் ஊழல் பெருகலாமே தவிர குடிப்பது நிற்கப்போவது கிடையாது. அதுமட்டுமல்ல, தரம்கெட்ட மதுவைக் குடிப்பதால், மக்கள் உடல்நலம் பாதிக்கப்படும். அத்துடன் அரசு தனக்கு வரவேண்டிய வருமானத்தையும் இழக்க நேரிடும் என்ற வாதத்தை அரசு முன்வைக்கக் கூடாது.இந்தப் பிரச்னையின் இன்னொரு கோணமும் இருக்கிறது. இன்றைக்கு நாம் விற்கும் மது முழுக்க முழுக்க ரசாயனக் கலவையால் உருவாக்கப்பட்டது. எனவே இதற்குப் பதிலாக கள்ளுக் கடைகளைத் திறப்பதன் மூலம் இந்த ரசாயனக் கலவையிலிருந்து தயாரிக்கும் மதுவுக்குப் பதிலாக இயற்கை வளத்தின் மூலம் கிடைக்கும் மது உடலைக் கெடுக்காது. அரசுக்கும் வருமானம் வரும் என்ற வாதத்தையும் வைக்கின்றனர்.அரசு எப்படி இலக்கு நிர்ணயம் செய்தது என்றால், அரசு மதுபானக் கடை வருவதற்கு முன் கள்ளச் சாராயம் எவ்வளவு புழக்கத்தில் இருந்தது என்று காவல்துறையில் ஒரு தோராயக் கணக்கீடு இருந்த காரணத்தால் எப்படியும் குடிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளோர் எண்ணிக்கை தெளிவாகத் தெரிந்து விடுகிறது. எனவே அந்த அளவுக்கு அரசு மதுபானக் கடைகளில் மது விற்கவில்லை என்றால், குடிப்போர் எங்கெங்கோ சென்று கள்ளச் சாராயத்தைக் குடிக்கின்றனர் என்று பொருள். இதன் மூலம் காவல்துறையினர் மாமூல் பெறுவர். எனவே அரசுக்கு வரும் வருமானம் குறையும். எனவே தான் தோராயமாக இலக்கு நிர்ணயித்து மதுபானம் விற்கப்படுகிறது. இதன்மூலம் காவல்துறைக்கு வரும் மாமூல் ஒழிக்கப்பட்டு, குடிப்போருக்கு நல்ல மது வழங்கப்பட்டு, அரசுக்கு வரும் நிதியைப் பெற்று மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடுவது என்ற வாதம் அரசுத் தரப்பில் வைக்கப்படுகிறது.இதற்கு மது ஒழிப்பு பிரதானமாக்கப்பட வேண்டும் என்பவர்கள் வைக்கின்ற வாதம், மக்கள் கெட்டுப்போவோம் என்று பந்தயம் கட்டினால், அரசு அதை அனுமதிப்பதா, மக்களுக்கு நல்வழி காட்டுவதல்லவா அரசின் வேலை. குடியில் மயங்குவோரை மாற்றுவது அரசின் கடமையல்லவா, மக்கள் கெட்டுப்போவோம் என்று சொல்லும்போது நன்றாகக் கெட்டுப்போங்கள். ஆனால், அரசுக்குத் தரவேண்டிய வருமானத்தைத் தாருங்கள் என எண்ணி மக்கள் வீழ்ச்சியில் ஆதாயம் பார்ப்பதா அரசின் வேலை. அரசு மதுபானக் கடைகளை மூடிவிட்டால் எரிசாராயம் வீதிகளில் பவனிவரும். காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாது. அது மட்டுமல்ல, அரசுக்கு வரும் வருமானம் காவல்துறைக்கும், கள்ளச் சாராயம் காய்ச்சுவோருக்கும் செல்லும் என்று சொல்லுவது பொறுப்புள்ள அரசாங்கத்தின் பதில் அல்ல.அரசாங்கத்தில் ஒரு துறையே அமலாக்கத்துக்காக இருக்கிறபோது, அந்தத் துறையில் உள்ள காவல்துறை அதிகாரிகளால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது என்றால் அப்படிப்பட்ட துறை நமக்கு எதற்கு? இப்படிப்பட்ட வாதமே அரசின் இயலாத் தன்மையை வெளிப்படுத்துவதாகும். இந்த வாதம் ஒரு கண்துடைப்பு என்று ஏற்க மறுக்கின்றனர் கருத்துகளை உருவாக்கும் அறிவுஜீவிகள்.இந்தச் சூழலில் இன்னொரு சக்தி இந்த மதுவுக்குள் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவை மதுப் பொருளாதாரம் மற்றும் மது தயாரிக்கும் தொழிற்சாலை. இந்தப் பொருளாதாரத்தை கையில் வைத்திருப்போர் அரசைத் தொடர்ந்து நிர்பந்தப்படுத்துவார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எப்படி புதிய பொருளாதாரத் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் எதிர் துருவங்களாக இருந்தபோதும் பற்றிப் பிடித்துச் செயல்படுகின்றனவோ, அதேபோல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இந்த மதுப் பிரச்னையில் ஒரே அணுகுமுறையைக் கொண்டுள்ளன.இந்தப் பிரச்னையில் இந்த இரண்டு கட்சிகளுமே சூழ்நிலைக் கைதிகள்தான். அரசு மது விற்பனையை நிறுத்தியவுடன் கள்ளச் சாராயத்தை காய்ச்சப்போவது சாதாரண மனிதர்கள் அல்ல. கட்சிக்காரர்கள் தான், இதைச் செய்ய முனைவார்கள். அப்படி அவர்கள் முனையும் போது அரசும், காவல்துறையும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பிக்கும்போது, கட்சிக்காரர்கள் கட்சிகளை விட்டு வெளியேற ஆரம்பிப்பார்கள். இந்தச் சூழல் ஆளும் கட்சியையும், பிரதான எதிர்க்கட்சியையும் பெருமளவில் பாதிக்கும்.இன்று இதற்குப் பிரதானமான தீர்வு, அனைத்துக் கட்சிகளையும் கூட்டவேண்டும், விவாதிக்க வேண்டும், மதுவுக்கு எதிராக இந்தக் கட்சிகள் அனைத்தும் மிகப்பெரிய இயக்கத்தை நடத்த வேண்டும், அந்த நேரத்தில் மதுவுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போது மது ஒழிக்கப்பட்டு விடும்; பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் நலம் காக்கப்படும்; எதிர்காலச் சந்ததியினர் வாழ்க்கை பாதுகாக்கப்படும்.
க.பழனித்துரை
(கட்டுரையாளர்: தலைவர், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக நிர்வாகவியல் துறை).
Tuesday, August 12, 2008
மால்கம் X

Monday, August 11, 2008
உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்
அளவற்ற திறமைகளை குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தாலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். 10-ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் வசதி இல்லாததால் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்து ஏதோ ஒரு வேலைக்கு செல்லும் அவல நிலையைப் போக்க ஒரு சிறந்த வழியை அரசு ஏற்படுத்தியுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்றால், 8-ம் வகுப்பு முதல் முனைவர் படிப்பு வரை உதவித்தொகையுடன் மேற்படிப்பை பயிலும் வாய்ப்பு
உங்களுக்கு உள்ளது என்பதை மாணவர்கள மறந்துவிட வேண்டாம்! தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு பிற்காலத்தில் போட்டித் தேர்வை எழுதுவதற்கான அனுபவத்தை இளம் பருவத்திலேயே வழங்குகிறது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் திறனாய்வு தேர்வினை எழுதி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
இப்போது உங்களுக்கு புத்துணர்ச்சி பிறந்திருக்கும். பெற்றோரின் கையை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் திறமைக்கு கிடைக்கும் வெகுமதியைக் கொண்டு எதிர்கால வாழ்க்கையை நீங்களாகவே தேர்வு செய்து முன்னேறவும், திறனாய்வு தேர்வு உதவுகிறது.
இந்த தேர்வை எப்படி எழுதுவது? விண்ணப்பம் அனுப்பும் முறை? உதவித் தொகை
குறித்த விவரங்கள்? உள்ளிட்ட தகவல்களை பின்வருமாறு விரிவாக அலசலாம்.
என்.சி.இ.ஆர்.டி.:-
தேசியகல்வி ஆய்வு மற்றும் பயிற்சி குழுமத்தினை (என்.சி.இ.ஆர்.டி.) 1961-ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவியது. கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வுகள், மகளிர் கல்வி, அமைதி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி, திறமைகளை அங்கீகரித்து சாதனைகளை மதிப்பிடுதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், படிக்கும் போது மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதத்தில் வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறது. உதாரணமாக கற்றல், எழுதுதல், பேசுதலில் உள்ள குறைபாடுகள், கணக்கிடுவதில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் உறுப்புகளை சரியாக இயக்க முடியாமல் சிரமப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு, பிற மாணவர்களைப் போன்று சமமாக கல்வி கற்றிட சிறப்பு முயற்சிகளையும் என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு மேற்கொள்கிறது. தரமான ஆசிரியர்களை உருவாக்கிட மண்டல கல்விக் கல்லூரி மூலம் ஆசிரியர் பயிற்சியையும் வழங்குகிறது.
மேற்கண்ட கல்வி சேவைகள் தவிர, யு.பி.எஸ்.சி. அமைப்பு நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் என்.சி.இ.ஆர்.டி. உதவுகிறது. அதாவது மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தரமான நூல்களை, இதன் நூல் வெளியீட்டு பிரிவு வெளியிடுகிறது. வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள நூல்கள் தேர்வுகளுக்கு பெரிதும் கைகொடுக் கும். இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே தரத்திலான கல்வி அறிவைப்பெற என்.சி.இ.ஆர்.டி. அமைப்பின் வெளியீடுகள் உதவுகின்றன.
தேசிய திறனாய்வு திட்டம்:-
1963-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வித் திறமை அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பெற்றுள்ள சிறந்த திறமையை கண்டறிந்து மேம்படுத்துவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.
அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, பொறியியல், மருத்துவம், சட்டம் என்று மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து அவர்களின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் துணை புரிகிறது. மாணவர்கள் இளம் பருவத்திலேயே ஆர்வமுடன் கற்க வேண்டும் என்பதர்ர்காக் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனுடையவர்களுக்கு ஒதுக்கீடும் உள்ளது.
தேர்வு முறை:-
மூன்று நிலைகளைக் கொண்டு இந்த திறனாய்வுத் தேர்வு அமைந்துள்ளது. மாநில அளவில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு உள்ளிட்டவை பிரதானமாக அமைந்திருக்கும். அந்தந்த மாநில கல்வித்துறையின் அல்லது ïனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது. இம்மாதம் 30-ந் தேதிக்குள் (30.8.08) இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் "இயக்குனர், அரசுத்தேர்வுத்துறை, கல்லூரி
சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 006'' என்ற முகவரிக்கு தங்கள்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
புதுச்சேரி மாணவர்கள் "இணை இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை, அண்ணாநகர்,
புதுச்சேரி-605 003'' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாநில அளவில் நடத்தப்படும் முதல்கட்ட தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். நுண்ணறிவுத் திறன், பாடப்பிரிவு சார்ந்த திறனறியும் விதத்தில் இந்த தேர்வு அமைந்திருக்கும். அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தேர்வில் வினாக்கள் அளிக்கப்படும். இந்த தேர்வு வரும் நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெறும். அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு (2009) மே மாதம் முதல் வாரத்திற்கு பின்பு நடத்தப்படும். தேர்வுகள் குறித்த முழு விவரங்கள், விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் முழுவதையும் http://www.ncert.nic.in/ என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.
தேர்வில் வெற்றி பெற வழிகள்:
மாணவர்களின் கல்வியறிவுத் திறமை தேசிய அளவில் பிரகாசிக்க தேசிய திறனாய்வு தேர்வு உதவுகிறது. தங்களின் கல்வியறிவுத் திறமையை அதிகரிக்க என்.சி.இ.ஆர்.டி. வெளியீடுகளை வாங்கிப் படித்து பயன்பெறலாம். 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் திறனாய்வு தேர்வு மூலம் அகில இந்திய அளவில் நடைபெறும் சிறந்த தேர்வுகளை எப்படி எழுதலாம்? என்பதற்கான முழு அனுபவத்தையும் போனசாக மாணவர்களுக்கு வழங்குகிறது.
இணையதளம் அளிக்கும் சேவை:-(http://www.ncert.nic.in/welcome.asp)
மாணவர்களின் கல்வி அறிவு, பொது அறிவை வளர்த்துக் கொள்ள என்.சி.இ.ஆர்.டி.
இணையதளத்தில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்விசார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை படிக்கும் வாய்ப்பும், டவுன்லோடு செய்யும் வசதியும் உள்ளது. அரசு தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்புவோருக்கு என்.சி.இ.ஆர்.டி. இணையதளம் உதவி செய்யும்.
Thursday, August 7, 2008
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி
கோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ-
1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்
5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.
7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.
8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்
9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.
11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.
13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.
14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.
15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.
16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
Wednesday, August 6, 2008
இசுராலின்கிராட் சமர் (Battle of Stalingrad)
இசுராலின்கிராட் நகரைக் கைப்பற்ற முனைந்த யேர்மன் படைகளுக்கும் சோவியத் படைகளுக்கும் 17 யூலை 1942 இல் இருந்து 02.02.1943 வரை இடம்பெற்ற சமரானது வரலாற்றில் குருதி தோய்ந்த சமர்களில் ஒன்றாகும்.
இசுராலின்கிராட் நகரைக் கைப்பற்ற முனைந்த யேர்மன் படைகளுக்கும் சோவியத் படைகளுக்கும் 17 யூலை 1942 இல் இருந்து 02.02.1943 வரை இடம்பெற்ற சமரானது வரலாற்றில் குருதி தோய்ந்த சமர்களில் ஒன்றாகும்.
இரண்டு பக்கமும் 1500000 படையினருக்குமேல் கொல்லப்பட்டனர்.
இறுதியில் யேர்மனியின் ஆறாவது படையும் அதனது தோழமைப் படையும் உருசியப் படைகளாற் சுற்றிவளைக்கப்பட்டு அழிவுக்குள்ளாகின.
இது இரண்டாம் உலகப்போரில் ஒரு படை எதிர்கொண்ட மிகப்பெரிய தோல்விகளில் இரண்டாவதாகும். இந்தச் சமரின் முடிவில் சரணடைந்த 230000 படையினரில் 91000 பேர் யேர்மன் படையினர். இவர்களுள் பீல்ட்மார்சல் போலசும் 22 ஜெனரல்களும் அடங்குவர்.
போரின் முடிவில் சரணடைந்தோரில் 5000 பேரே உயிர் தப்பினர். 11000 யேர்மன் படையினர் சரணடைய மறுத்து 1943 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் வரை சண்டையிட்டனர். அவர்களில் பலர் கொல்லப்பட எஞ்சியோர் சரணடைந்தனர்.
இசுராலின்கிராட் சமரின்போது நகரை விட்டு மக்கள் நீங்குவதை இசுராலின் தடுத்தார். பொதுமக்களில் பெண்கள், சிறுவர்கள் உட்பட எல்லோரும் அகழிகள் வெட்டுதல், அரணமைத்தல் போன்ற பணிகளிலீடுபடுத்தப்பட்டனர். அங்கு மக்கள் இருப்பது நகரைக் காக்கும் படையினருக்குச் சண்டையிடத் தூண்டுதலைத் தரும் என இசுராலின் நம்பினார்.
யேர்மனியின் வான்படைக்கு எதிராக வானூர்தி எதிர்ப்புக் கலங்களைப் பயன்படுத்தும் பணி 1077 ஆவது வானூர்தி எதிர்ப்பு ரெஜிமென்டிடம் தரப்பட்டது.
இந்தப் பிரிவில் பணியாற்றியவர்களில் பெரும்பாலோர் தன்னார்வத்துடன் படையிலிணைந்த பெண்களாவர். இவர்களுக்குத் தரைவழித் தாக்குதல் நடத்தும் எதிரியைத் தாக்குவதற்கான பயிற்சி இருக்கவில்லை.
இருந்தபோதும் வேறு சோவியத் பிரிவுகளின் ஆதரவு இல்லாத நிலையிலும் இந்தப் படைக் கலங்களைக் கையாண்டோர் யேர்மனியின் 16 ஆவது பன்சர் (ராங்கி) டிவிசன் முன்னேறிய போது அதனை எதிர்த்து நின்றனர். அங்கிருந்து 37 வானூர்திகளின் எதிர்ப்புப் படைக்கலங்களையும் அதை இயக்கியோரையும் சூட்டுக்கு சூடு என இடம்பெற்ற சண்டையின் பின்பே யேர்மனியர் அழித்தனர்.
இந்தக் காலப்பகுதியில் இந்தப் பகுதிக்கு சண்டையிட வந்த சோவியத்தின் புதிய காலாட்களின் வாழ்வு 24 மணிநேரத்திற்குக் குறைவாக இருந்தது. அதிகாரிகள் வாழ்வு அண்ணளவாக மூன்று நாட்களாக இருந்தது.
~ஒரு அடிகூட பின்னால் வைக்கக்கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஒப்புதலில்லாமல் பின்வாங்கும் தளபதிகளுக்கு படைய மன்றில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சமரின் தொடக்கத்தில் சோவியத்தானது நேரடியாகப் போர் உற்பத்தியில் தொடர்பு கொண்டிராத ~தொழிலாளர் படையை நம்பியே சமரை நடத்தியது. சமரின் தொடக்கத்தில் குறுகிய காலம் ராங்கிகளை உற்பத்திசெய்ததோடு, அதனை ஓட்டும் பணியையும் இந்தத் தொழிலாளரே செய்தனர்.
ராங்கிகள் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக முன்னணிக் கோட்டுக்கு வண்ணம் பூசப்படாமலும் அல்லது குறிகாட்டி பெருத்தப்படாமலும் ஓட்டிச் செல்லப்பட்டன.
யேர்மனியின் அப்போதைய படைத்துறைக் கோட்பாடு இணைந்த படைகளின் பிரிவுகள் மூலம் நடத்தப்படும் தாக்குதலாக இருந்தது. இதனை அவர்கள் மின்னற் போர்முறை (டீடவைணமசநைப) என அழைத்தனர்.
ராங்கிகள், காலாட்கள், பொறியியலாளர், ஆட்டிலறி, தரையில் தாக்கும் வானூர்திகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாடாக இது இருந்தது. இதனை எதிர்கொள்ள சோவியத் தளபதிகள் ஓர் எளிய முறையைக் கையாண்டனர். யேர்மனியர்களைக் ~கட்டித் தழுவுதல் என இந்தத் தந்திரத்தைச் சோவியத் தளபதி சுக்கோவு அழைத்தார்.
எவ்வளவுக்கு இயலுமோ அவ்வளவுக்கு நெருக்கமாக யேர்மனியக் கோட்டுக்கு (Line) அருகே சோவியத்தின் கோட்டை அமைப்பதே இந்தத் தந்திரமாகும். இதனால் யேர்மன் படைகளுக்கு அவற்றின் ஆதரவுப் படைகளின் அதாவது ஆட்டிலறி, தரையில் தாக்கும் வானூர்திகளின் ஆதரவைப் பெறமுடியாது செய்யப்பட்டது.
ஒவ்வொரு வீதி, தொழிற்சாலை, வீடு, அடித்தளம், படிக்கட்டு ஆகியவற்றிற்காகக் கடும் சண்டை நடந்தது. இந்த நகரப் போர்முறையை யேர்மனியர் ~எலிப் போர் (Rattenkrieg) என அழைத்தனர்.
அடுக்களையைப் பிடித்தாயிற்று இருந்தபோதும் ஆட்கள் வாழும் அறையைப் பிடிக்கச் சண்டை பிடிக்கிறோம் என யேர்மனியர் இந்தச் சண்டை குறித்துக் கசப்புடன் அதேவேளை நகைச்சுவையுடன் கூறிக்கொண்டனர்.
மாமெயவு கேர்கன், எனும் மலையைக் கைப்பற்ற நடந்த சண்டையும் ~பவலொவின் வீடு என அழைக்கப்பட்ட வீட்டுக்காக நடந்த சண்டையும் இசுராலின்கிராட் சமரின் கடுமையை எடுத்துக்காட்டக் கூடிய இரு நிகழ்;ச்சிகளாகும்.
மாமெயவு கேர்கன் மலைக்கும் முதலாம் தொடர்வண்டி நிலையத்திற்கும் செப்ரெம்பர் 13 ஆம் நாள் நடந்த சண்டையில் சோவியத்தின் 13 ஆவது காவலர் சுடுகலம் டிவிசன் கலந்து கொண்டது.
யேர்மனியிடமிருந்து இந்தப் பகுதியைக் கைப்பற்ற முனைந்த சோவியத் படைகள் ஓரளவே அதன் இலக்கில் வெற்றி பெற்றன. ஆறு மணி நேரத்துள் பதினான்கு தடவைகள் இவை கைமாறின.
13 ஆம் திகதி சண்டையிலீடுபட்ட 10,000 சோவியத் படையினரில் ஒருவர் கூட அடுத்த நாள் காலை உயிரோடிருக்கவில்லை. யேர்மனியர்களும் இதேயளவுக்கு இழப்புக்களைச் சந்தித்தனர்.
யக்கோவு பவலோவுவின் கீழ் செயற்பட்ட சோவியத் பிளாட்டூன் ஒன்று குடியிருப்புக் கட்டடத் தொகுதி ஒன்றைத் தகர்க்க முடியாத அரண்கோட்டையாக மாற்றியிருந்தது. அந்தப் பிளாட்டூன் அந்தப் பகுதியைச் சூழ கண்ணிகளைப் புதைத்தது. சாளரங்களில் கனரகப் படைக்கலங்களை நிலைப்படுத்தியது.
அடித்தளத்தைத் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தியது. ஓய்வின்றிச் சிறிய அளவில் பெற்ற வலுவூட்டல் படையுடன் இரண்டு மாதங்கள் இந்தப் பிளாட்டூன் அந்தக் குடியிருப்புக் கட்டடத் தொகுதியைக் காத்து நின்றது.
~பிரெஞ்சின் தலைநகர் பாரிசைக் கைப்பற்றக் கொல்லப்பட்ட யேர்மனியர்களைக் காட்டிலும் கூடிய யேர்மனியர் பவலோவுவின் வீட்டைக் கைப்பற்றும் முயற்சியில் கொல்லப்பட்டனர் என சுக்கோவு பின்னாளில் நகைச்சுவையாகக் கூறுவதுண்டு. இரண்டாம் மாதத்தில் யேர்மன் படையினர் அணி அணியாக வந்து அந்த வீட்டுத் தொகுதியைத் தாக்கினர்.
முதல் வந்த அணி கொல்லப்பட்டதும் குடிமனையில் உள்ளே இருக்கும் சோவியத் படையினர் வெளியே ஓடி அங்கு குவிந்து கிடந்து கனரகப் படைக்கலங்கள், ராங்கி எதிர்ப்புப் படைக் கலங்கள் ஆகியவற்றிற்கான தெளிவான சூட்டுப்பார்வையை மறைக்கும் யேர்மனியரின் உடல்களை உதைத்துக் கீழே வீழ்த்த வேண்டியிருந்தது. சார்யன்ட் பவலோவுக்கு ~சோவியத் ஒன்றியத்தின் வீர நாயகன் விருது வழங்கப்பட்டது.
யேர்மனி 22.06.1941 அன்று ~நடவடிக்கை பார்பரோசா எனும் பெயரில் சோவியத் ஒன்றியத்தின் மீதான வன்கவர்வைத் தொடங்கியது. விரைந்து முன்னேறிய யேர்மன் படை 1942 இளவேனிற் காலத்தில் வடக்கே லெனின் கிராடிலிருந்து தெற்கே இரொசுரொவு வரை காப்பான கோட்டை அமைத்திருந்தது.
மொசுக் கோவை யேர்மனியர் கைப்பற்ற எடுத்த முயற்சியை சோவியத் படைகள் முறியடித்தன. தெற்கே உக்ரேனையும் கிறிமியனின் பெரும் பகுதியையும் யேர்மனி அதன் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்திருந்தது.
இந்த நடவடிக்கை தொடர்கையில் கிட்லர் அதில் தனிப்பட தலையீடு செய்து சோவியத்தின் முக்கிய தொழிற்சாலைகளையும் கோகசசுவில் இருக்கும் அதன் நிலநெய் வயல்களையும் கைப்பற்றி சோவியத்தை முடக்கும்படி கட்டளைப் பணியகத்திற்கு ஆணையிட்டார். இசுராலின்கிராடு ஒரு முக்கிய தொழில் நகரமாகும்.
மேலும் வோல்கா ஆற்றைக் கைப்பற்றுவதன் மூலம் கசுபியன் கடலுக்கும் வட உருசியாவுக்குமான முக்கிய போக்குவரத்து வழி துண்டாடப்படும். ~நடவடிக்கை நீலம் ('Case Blue') எனப் பெயரிடப்பட்ட இசுராலின்கிராட் மீதான வன்கவர்வில் யேர்மனியின் ஆறாவது, 17 ஆவது படை, 04 ஆவது, 01 ஆவது பன்சர் படை என்பன பங்கெடுத்தன. இவற்றைத் தவிர உருமேனிய, கங்கேரிய, இத்தாலியப் படைகளும் பங்கெடுத்தன.
இசுராலின் இந்த முன்னேற்றத்தைத் தடுக்க வட கிழக்கு முனையின் தளபதியாக மார்சல் அன்டிரீ யெரீ மென்கோவை நியமித்தார். அவரும் குருசோவும் இசுராலின்கிராட் நகரின் காப்புக்கான திட்டமிடலை மேற்கொண்டனர்.
இசுராலின்கிராட்டுக்குக் கிழக்கே வோல்கா ஆறு ஓடியது. ஆற்றுக்கு அப்பால் சோவியத்தின் 62 ஆவது படை நிறுத்தப்பட்டது. அதன் தளபதியாக லெப். ஜெனரல் வசிலி சுக்கோவு நியமிக்கப்பட்டார். எவ்வளவு உயிரிழப்புக்கள் வரினும் இசுராலின்கிராட்டைக் காக்கும் பணி இந்தப் படைக்குத் தரப்பட்டது. ஒரு கட்டடத்தில் மேற்குக்கரையில் ஆற்றிலிருந்து யேர்மனியர் 1370 மீற்றரில் நின்றனர்.
சமரின் கடுமையாலும் யேர்மன் படைக்கான வான்வழி ஆதரவு குறைந்தமையாலும் மீள்வலுவூட்டற் படைகள் வேறு பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளுக்குத் தேவைப்பட்டதாலும் இசுராலின் கிராட்டின் யேர்மன் படையின் வல, இடது பகுதிகள் நொய்தான நிலையிலிருந்தன.
எடுத்துக்காட்டாக இசுராலின்கிராட்டின் வட பகுதியில் இத்தாலியப் படைக்கும் வொரொனெக் கிற்கும் இடையே நின்ற கங்கேரியாவின் இரண்டாவது படை நின்ற பகுதியில் சில இடங்களில் 1-2 கி.மீ. நீளக்கோட்டில் ஒரு பிளாட்டூனே நின்றது.
சோவியத் படை இசுராலின்கிராட்டில் இழப்புக்களைச் சந்தித்தவேளை அது 27 காலாட் டிவிசன், 19 கவசப் பிரிகேட், வான்படை என ஒரு சேமப்படையை உருவாக்கியது. நவம், 1942 இல் யேர்மனியின் ஆறாவது படையின் இடது, வலது பகுதிகளினூடாக சோவியத் படை ஊடுருவி யேர்மனியின் ஆறாவது படையின் பெரும்பகுதியைச் சுற்றிவளைத்தது.
யேர்மன் படையினர் 91000 பேரோடு ஏறத்தாழ 230000 படையினர் சுற்றிவளைக்கப்பட்டனர். ஏனையோர் உருமேனிய, குரேசியப் படையினராவர்.
சோவியத்தின் முற்றுகையின்போது உடை, உணவு பற்றாக்குறையால் உணவின்றியும் குளிரால் உடல் விறைத்தும் பல யேர்மன் படையினர் இறந்த போதும் இறுதிவரை அதன் கட்டொழுங்கு குலையவில்லை.
சுற்றிவளைப்பை உடைத்து வெளிவரும்படி பல யேர்மன் தளபதிகள் ஆலோசனை கூறியபோதும் கிட்லரின் பணிப்பை ஏற்று யேர்மன் படைத்தளபதி போலசு பின்வாங்காது நின்றார்.
இறுதியில் உணவு, வெடிபொருள் பற்றாமையால் சரணடைந்தார். யேர்மன் பீல்ட் மார்சல்களும் ஒருவரும் சரணடைந்ததில்லை எனக்கூறிய கிட்லர் போலசை பீல்ட் மார்சலாக்கினார். ஆனால், அவர் சரணடைந்தார். பீல்ட் மார்சல் போலசை யேர்மனியிடம் ஒப்படைத்தால் யேர்மன் சிறையிலிருக்கும் லெப் நிலையுடைய இசுராலின் மகனை சோவியத்திடம் தருவதாகக் கிட்லர் கூறினார்.
ஒரு பீல்ட்மார்சலுக்கு மாற்றாக லெப்டினன்டைப் பெறத் தயாராக இல்லை என இசுராலின் பதிலளித்தார்.
இசுராலின்கிராடு 1925 வரை சாரிற்சின் (Tsarits yn) என்றும் பின்பு இசுராலின்கிராட் என்றும் 1961 இல் இருந்து வோல்கோகிராட் என்றும் அழைக்கப்படுகின்றது.
இசுராலின்கிராட்டில் இடம்பெற்ற சமரானது வரலாற்றில் மிகவும் குருதி தோய்ந்த சமராகும். இங்கு யேர்மன் அடைந்த தோல்வி இரண்டாம் உலகப் போரில் ஒரு படை எதிர்கொண்ட மிகப்பெரிய தோல்விகளில் இரண்டாவதாகும்.
உசாத்துணை நூல்கள் கட்டுரை:-
1. Sun Tzu and the Art of Modern Warfare, Mark mcNeilly2. World Atlas of Warfare, Richard Holmes3. Battle of Stalingrad, Wikipedia
நன்றி: வெள்ளிநாதம் 18.07.2008
Tuesday, August 5, 2008
Sunday, August 3, 2008
மீனவத் தமிழர்களின் உயிரைக் காத்திட நாம் போராட தயாராவோம் -பசுபதி பாண்டியன்

"சிங்கள அரசால் கொல்லப்படும் தமிழின மீனவர்களைப் பற்றி, மத்திய அமைச்சர்களோ, தமிழக அமைச்சரோ வாய் திறப்பதில்லை தமிழினத்தின் உரிமையைக் காத்திடவும், மீனவத் தமிழர்களின் உயிரைக் காத்திடவும் நாம் போராட தயாராவோம்" என்று தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் உணர்ச்சியோடு உரையாற்றினர்.ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து சுட்டுக்கொல்லும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து இன்று சென்னையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகள் கூட்டுக்குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு முழக்கங்கள் எழுப்ப, தொடர்ந்து தலைவர்களும் குழுமியிருந்த தொண்டர்களும் உணர்ச்சியோடு முழக்கம் எழுப்பினர்.
நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல்வேறு கட்சிகள் அமைப்புகளைச் சேர்ந்த பேரா. சரசுவதி, இயக்குநர்கள் வ.செ.குகநாதன், புகழேந்தி, கவிஞர்கள் இன்குலாப், ஜெயபாசுகரன், ஓவியர் புகழேந்தி, பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா, முனைவர் தமிழப்பன், பேரா. ஆறு. அழகப்பன், பொன்னிறைவன், இரா. பத்மநாபன், இளவழகன், அற்புதம் அம்மையார், பேரா. மருதமுத்து, தமிழர் கழகத்தின் முத்துக்குமார் மணிகண்டன், கி. த. பச்சையப்பன் ஆகியோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் பெரும் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

